×

ஹர்ஷல், கிறிஸ்டியன் அபார பந்துவீச்சு பெங்களூர் அணிக்கு 142 ரன் இலக்கு

அபுதாபி: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் டி 20 லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 142 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹர்ஷல் படேல், கிறிஸ்டியன் அபாரமாக பந்துவீசி சன்ரைசர்ஸ் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். அபுதாபியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார். ஐதராபாத் அணியில் ஜேசன் ராய், அபிஷேக் ஷர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அபிஷேக் 13 ரன்னில் கார்டன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து மோசமான தொடக்கத்தை தந்தார். ஆனாலும், அனுபவமிக்க கேன் வில்லியம்சன், ஜேசன் ராயுடன் இணைந்து பொறுப்பாக ஆடினார். இந்த ஜோடி 70 ரன் சேர்த்த நிலையில், ஹர்ஷல் படேல், வில்லியம்சன் (31) விக்கெட்டை வீழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து கிறிஸ்டியன் அட்டகாசமாக பந்துவீசி 15வது ஓவரின் முதல் பந்திலும், கடைசி பந்திலும் பிரியம் கார்க் (15), ஜேசன் ராய் (44) என இருவரின் விக்கெட்களை வீழ்த்த ஐதராபாத் அணி ரன் வேகம் ஒரேடியாக சரிந்தது. அடுத்த வந்த வீரர்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை. தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய ஹர்ஷல் படேல், விரித்திமான் சாஹா (10), ஜேசன் ஹோல்டர் (16) விக்கெட்டுகளை வீழ்த்தினார். அப்துல் சமத் (1) சாஹல் சுழலில் வெளியேறினார். இதனால் ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய ஹர்ஷல் படேல் 3, கிறிஸ்டியன் 2, சாஹல், கார்டன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். அடுத்ததாக 142 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ஆர்சிபி அணியில் கோஹ்லி, படிக்கல் ஜோடி ஆட்டத்தை தொடங்கினர்.

Tags : Herschel ,Christian Apara ,Bangalore , Herschel, Christian Apara bowling for Bangalore 142 runs
× RELATED ஜூலை 1ம் தேதி முதல் புதுவையில் இருந்து...